திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
S.P.தனிப்படையினர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அம்மாபட்டியில் ஜெயபால் என்பவர் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து S.P.தனிப்படை போலீசார் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன் ஜெயபால்(45), மனைவி நந்தினி(37) மற்றும் நத்தம், சமுத்திரப்பட்டியை சேர்ந்த சையது காட்டுபாவா(37) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரெட்டியார்சத்திரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி உட்பட 3 பேர் கைது, 56 கிலோ கஞ்சா பறிமுதல் – எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

More Stories
ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் – பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை
சாயல்குடி ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகார் – மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்ய கோரிக்கை
கீழமுந்தலில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு