February 7, 2026

வங்கி கடன் முழுவதும் ரத்து… வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்கள் நிம்மதி- கேரள அரசு குட் நியூஸ்!

ரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வங்கி கடன் ரத்து தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி பெரிதும் ஆறுதல் அளித்திருக்கிறகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மலைகளும், பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கையும் கொட்டி கிடக்கின்றன. இந்த சூழலில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அதிகாலை வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். 400க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டன. குறிப்பாக வைதிரி தாலுகாவிற்கு உட்பட்ட பல பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் புதைந்து போனது.

வயநாடு மக்களின் கடன் தொகை

இதிலிருந்து மீண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்தன. அந்த வகையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கடன் தொகை 18.75 கோடி ரூபாயை எந்தவித நிலுவையும் இல்லாமல் கேரள அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கான தொகையை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது வீடு, உடைமைகள், உறவுகள், இத்தனை ஆண்டுகால சேமிப்பு உள்ளிட்டவற்றை இழந்து தவிக்கும் மக்களுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதில் ஒரு கேள்வி எழக்கூடும்.

வயநாடு

இழுபறியாக்கிய மத்திய அரசு

நிலச்சரிவு ஏற்பட்டு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. கடனை ரத்து செய்ய இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என்ற கேட்கலாம். வங்கி கடனை பொறுத்தவரை மத்திய அரசிடம் முறையிட வேண்டிய கட்டாயத்தில் கேரளா அரசு இருந்தது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி கடனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் டெல்லியில் இருந்து சாதகமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் சில நடைமுறைகளை திரும்ப பெற்றால் விஷயம் மிக எளிதாக முடிந்திருக்கும்.

Spread the love