இந்தியாவின் வரி முறையில் பல முக்கியமான மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026
முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
ஏப்ரல் 1 2026 முதல் அமலாகும் வருமான வரி விதிகள் விவரம்?, பத்திர
பரிவர்த்தனை வரி (STT) உயர்வு விவரங்கள் மற்றும் புதிய வருமான வரிச்
சட்டம் 2025 மாற்றங்கள் போன்ற விவரங்களை பார்ப்போம்.
புதிய வருமான வரிச் சட்டம் முக்கிய மாற்றங்கள் ?
‘Tax Year’ -இனி குழப்பம் வேண்டாம்!
புதிய சட்டத்தின் ஒரு முக்கிய மாற்றம் ‘வரி ஆண்டு’ (Tax Year) என்ற
கருத்தை அறிமுகப்படுத்துவதாகும். இது இதற்கு முன்பு இருந்த ‘முந்தைய
ஆண்டு’ (previous year) மற்றும் ‘வரி மதிப்பீட்டு ஆண்டு’ (assessment year)
என்ற முறையை வச்சி குழம்பிட்டு இருந்தோம்ல?, ஆனால் இனி புதிய
முறையின் கீழ், ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் ‘வரி
ஆண்டு’ (Tax Year) எனப்படும் ஒரே காலப்பகுதியின் கீழ் வரும். இந்த
நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு வரி செயல்முறையை எளிமையாகவும்
சுலபமாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருமான வரி அடுக்குகளில் மாற்றமில்லை
தனிநபர்களுக்கான தற்போதைய வருமான வரி அடுக்கு விகிதங்களில் (Tax
Slabs) அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை. பழைய வரி முறை
மற்றும் புதிய சலுகை வரி முறை ஆகிய இரண்டின் கீழும் வரி விகிதங்கள்
அப்படியே இருக்கும். இதன் பொருள் பெரும்பாலான வரி
செலுத்துவோருக்கு தனிநபர் வரிச் சுமையில் எந்த மாற்றமும் இருக்காது.
புதிய ITR தாக்கல் காலக்கெடு
வருமான வரி கணக்குகளை (ITR) தாக்கல் செய்வதற்கான
காலக்கெடுவையும் மத்திய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது.
ITR-1 மற்றும் ITR-2 போன்ற எளிய படிவங்களைத் தாக்கல் செய்யும்
தனிநபர்களுக்கு ஜூலை 31 காலக்கெடுவே தொடரும்.
ஆனால் தணிக்கை (Audit) தேவையில்லாத வணிகம் அல்லது தொழிலில்
ஈடுபட்டுள்ள வரி செலுத்துவோர், இனி ஜூலை 31-க்குப் பதிலாக ஆகஸ்ட்
31 வரை கால அவகாசம் பெறுவார்கள்.
கணக்குத் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் வரி
செலுத்துவோருக்கு அக்டோபர் 31 காலக்கெடுவாக இருக்கும்.
குறிப்பிட்ட விதிகளின் கீழ் வரும் சிறப்பு வழக்குகளுக்கு நவம்பர் 30
காலக்கெடுவாக இருக்கும்
திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்யும் கால அவகாசம்
நீட்டிப்பு
திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை (Revised Returns) தாக்கல்
செய்வதற்கான கால வரம்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரி
செலுத்துவோர் வரி ஆண்டு முடிந்த ஒன்பது மாதங்களுக்குள் தங்கள்
படிவத்தைத் திருத்த முடியும்.
ஆனால் புதிய சட்டத்தின் கீழ், இந்தத் திருத்தக் காலம் 12 மாதங்களாக
அதிகரிக்கப்படும். இருப்பினும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படிவம்
திருத்தப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும். வருமானம் ரூ. 5 லட்சம் வரை
இருந்தால் கட்டணம் ரூ. 1000 ஆகவும், வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல்
இருந்தால் ரூ. 5000 ஆகவும் இருக்கும்.
STT மற்றும் இதர வரி மாற்றங்கள்
ஷேர் மார்க்கெட் முதலீட்டாளர்களுக்கு, பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்
(F&O) வர்த்தகத்திற்கான பத்திர பரிவர்த்தனை வரியை (STT) அரசாங்கம்
அதிகரித்துள்ளது.
விற்பனை செய்யப்படும் ஆப்ஷன்ஸ் (Options) மீதான STT 0.10
சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாக உயரும்.
பியூச்சர்ஸ் (Futures) மீதான STT 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக
அதிகரிக்கும்.
பல பரிவர்த்தனைகளுக்கான மூலத்தில் வரி வசூல் (TCS) விகிதங்களும்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பணியாளர் தனது வீட்டிற்கும்
அலுவலகத்திற்கும் இடையே பயணம் செய்வதற்காக முதலாளி வழங்கும்
செலவு, வரிக்குரிய சலுகையாகக் கருதப்படாது.

More Stories
36 மணி நேரத்துக்குள் சிலிண்டர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவு
கேரள தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்பிக்கள்!
‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’