ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,115க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More Stories
இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அதிகாலை முதலே வரிசையில் நின்ற பயனர்கள்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா உறுதி
தங்கம் விலை அதிரடியாக ரூ.1,160 அதிகரிப்பு – என்ன காரணம்?