July 8, 2026

ஸ்டாலினுடனான நட்பு இன்னும் தொடர்கிறது: தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை – திருமாவளவன் தகவல்

சென்னை: தவெக தலை​மை​யில் கூட்​டணி அமைய​வில்​லை; மு.க.ஸ்​டா​லின் உடனான நட்பு இன்​னும் தொடர்​கிறது’ என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் கூறிய​தாவது: தவெக ஆட்சி அமைக்க 2 இடங்​கள் பற்​றாக்​குறை இருந்​த​தால் ஆதரவு கோரி எங்​களுக்கு கடிதம் வந்​தது. அப்​போது விசிக வெளி​யில் இருந்​து​தான் ஆதரவு என தெரி​வித்​தோம். பின்​னர் 10 நாட்​கள் கழித்​து​தான் அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றோம்.

அதே​நேரம், இன்​னும் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கிறீர்​களா? என என்​னிடம் கேட்​டால், ஆம்​.. திமுக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தாகவே உணர்​கிறோம். இதுவே என் பதில்.

தற்​போது​வரை தவெக கூட்​ட​ணி​யில் விசிக இணைய அதி​காரப்​பூர்​வ​மாக எந்த நிகழ்​வும் நடை​பெற​வில்​லை, தவெக கூட்​டணி தொடர்​பாக ஆதரவு கட்​சிகளின் ஆலோ​சனைக் கூட்​டம் ஜூலை 1-ம் தேதி முதல்​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்​றது.

ஆனால் அந்​தக் கூட்​டத்​தில் கூட்​டணி குறித்து இறுதி முடிவு எடுக்​க​வில்​லை. எனவே தவெக தலை​மை​யில் ஒரு கூட்​டணி அமைய​வில்லை என்​பது​தான் இன்​றைய நிலை. விசிக அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றதும் திமுக​வுக்கு துரோகம் செய்து விட்​டோம் என விமர்​சிக்​கின்​றனர்.

பதவி என்​றவுடன் ஒரு கூட்​ட​ணியை உதறி​விட்டு நாங்​கள் ஓடி​விட​வில்​லை, எடுக்​கின்ற முடிவு​கள் ஒவ்​வொன்​றை​யும் கூட்​டணி தலை​மை​யான மு.க.ஸ்​டா​லினிடம் பகிர்ந்​து​ கொண்​டோம். அந்த உறவு இன்​னும் தொடர்​கிறது.

இந்​நிலை​யில்​தான் விசிக​வில் அதிருப்​தி​யில் இருந்த பொறுப்​பாளர் ஒரு​வர் வில​கி, திமுக​வில் இணைந்​தது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. அந்த ஆதங்​கத்​தில்​தான் விருது வழங்​கும் விழா​வில் அவ்​வாறு பேசினேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love