மதுரை, 26 பிப்ரவரி 2026: ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) மதுரையில் சாலை பாதுகாப்பு கன்வென்ஷன் நடத்தி, 140-க்கும் மேற்பட்ட பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை இணைத்தது. குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பாதுகாப்பான சாலை பழக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ‘Kids’ Mindset Change’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. மதுரையில் அதிகரித்து வரும் இருசக்கர வாகன விபத்துகளை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், HMSI சார்பில் பொது மேலாளர் – பாதுகாப்பான ஓட்டுதல் ஷிஷிர் சதுர்வேதி மற்றும் பொது மேலாளர் – வெளிப்புற விவகாரங்கள் நிதின் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு மொடியூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன், பள்ளிகளில் அவற்றை பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்பட்டது. இந்த மொட்யூல்கள் பல மொழிகளில், நேரலை மற்றும் பதிவிறக்கம் வசதியுடன் வழங்கப்படுகின்றன.
“HMSI-யின் ‘Safety for Everyone’ நோக்கத்தின் கீழ், எதிர்கால தலை முறையில் பாதுகாப்பான சாலை நடத்தை உருவாக்குவது எங்கள் முக்கிய இலக்காகும். பள்ளிகள் மூலம் மாணவர்களை நேரடியாக சென்றடைவது, சமுதாயத்தில் நீண்ட கால மாற்றத்தை உருவாக்கும்,” என்று HMSI சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 24 கான்வென்ஷன்கள் மூலம் 11.5 லட்சம் மாணவர்களை சென்றடைந்துள்ளது நிறுவனம், இந்த ஆண்டில் மேலும் பல பள்ளிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.

More Stories
‘ஓபிஎஸ் எழுதியுள்ள துரோக வரலாற்றை மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை’ – கவுதமி
உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவை சிறுமி வெண்பாவின் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
விபத்துக்களை தடுக்க திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் செய்த அதிகாரிகள்!