அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டும். இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் (எம் சி மேல்நிலைப் பள்ளி) முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர் கே. கிஷோர் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் எம். சுல்தான் ரகீம் இருவருக்கும் பள்ளி வளாகத்தில் இன்று பிற்பகல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் சால்வை அணிவித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கி, பரிசும் கொடுத்துப் பாராட்டினார். மதுரைக் கல்லூரி வாரியக் குழு உறுப்பினர் தாம்பிராஸ் இல. அமுதன் தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் பி. பாலாஜிராம், உதவித் தலைமை ஆசிரியர்கள் என். வெங்கடசுப்பிரமணியன், பி.மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். வாழிய பேராற்றல் வாழியவே. பள்ளித் தாளாளர் மூத்த வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி என்பது கூடுதல் சிறப்பு. கல்வியால் மேலும் உயர்நிலை பெற்றிட வாழ்த்தும் பாராட்டும்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டும்

More Stories
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை செப்.15 வரை நீட்டிப்பு
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பிய 70% இடங்கள் – கிராமப்புறங்களில் காணப்படும் மந்தநிலை!