July 1, 2026

ஆவின் பால் கொள்முதல் சரிவு: சென்னையில் 30% விநியோகம் குறைப்பு என குற்றச்சாட்டு

சென்னை: ஆ​வின் நிறு​வனத்​தின் பால் கொள்​முதல் குறைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் பச்சை நிற பால் பாக்​கெட் உட்பட பல்​வேறு பால் வகை​களின் விநி​யோகம் 30 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

ஆவின் நிறு​வனத்​தின் தினசரி பால் கொள்​முதல் தற்​போது 26 லட்​சம் லிட்​ட​ராக சரிந்​துள்​ளது. இதனால், பச்சை நிற பால் பாக்​கெட் உட்பட பல்​வேறு பால் விநி​யோகம் குறைக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை, புறநகரில் தினசரி 16 லட்​சம் பால் விநி​யோகம் செய்​யப்​பட்​டது.

தற்​போது 14 லட்​சம் முதல் 14.5 லட்​சம் லிட்​டர்​தான் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. சென்​னை​யில் மட்​டும் ஒன்​றரை லட்​சம் பால் விநி​யோகம் ஆவின் நிர்​வாகம் குறைத்து உள்​ள​தாக பல்​வேறு தரப்​பினர் குற்​றச்​சாட்டி உள்​ளனர்.

இதுகுறித்​து, தமிழக பால் முகவர்​கள் சங்​கத் தலை​வர் பொன்​னு​சாமி கூறிய​தாவது: ஆவின் பால் தினசரி கொள்​முதல் தற்​போது 26 லட்​ச​மாக இறங்​கி​விட்​டது. இதற்கு முக்​கிய காரணம் கொள்​முதல் விலை உயர்த்​தாதது ஆகும்.

திமுக​வின் தவறான நடவடிக்​கை​யால் இந்த பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை, புறநகரில் சுமார் 30 சதவீதம் பாலை குறைத்​துள்​ளனர். இதனால் பொது​மக்​களுக்கு போதிய பாலை அளிக்க முடிய​வில்​லை.

ஆவினின் நஷ்டத்தை சரி செய்ய கொள்​முதல் விலை, விற்​பனை விலையை உயர்த்​தி​னால் பாலை தட்​டுப்​பாடு இல்​லாமல் கொடுக்க முடி​யும். எனவே, கொள்​முதல் விலையை ரூ.6-ம், விற்​பனை விலையை ரூ.10-ம் உயர்த்த வேண்​டும். பால் முகவர்​களுக்கு கமிஷன் தொகையை ரூ.2 உயர்த்தி கொடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஆவின் விளக்​கம்

இதுகுறித்​து, ஆவின் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு : சென்னை முழு​வதும் அனைத்து வகை​யான பால் வகைகளை​யும் ஆவின் நிறு​வனம் எவ்​வித தடை​யுமின்றி தொடர்ந்து விநி​யோகிக்​கிறது.

ஆவின் நிறு​வனம் தனது பரந்த விநி​யோக கட்​டமைப்​பின் மூலம் சென்னை பெருநகரப் பகு​தி​யில் உள்ள நுகர்​வோருக்கு தினசரி சராசரி​யாக சுமார் 14.50 லட்​சம் லிட்​டர் பாலை விநி​யோகம் செய்​கிறது. கடந்த ஆண்​டின் இதே கால​கட்​டத்​துடன் ஒப்​பிடு​கை​யில், பால் விநி​யோகம் 36 ஆயிரம் லிட்​டர் அதி​கரித்​துள்​ளது.

எந்​தவொரு பால் வகை​யின் விநி​யோகத்​தி​லும் குறைப்பு ஏது​மில்​லை. வழக்​க​மான தேவை மற்​றும்​ நுகர்​வோரின் தற்​போதைய தேவைக்​கேற்ப பால் விநி​யோகம் தொடர்ந்​து மேற்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Spread the love