October 7, 2026

இந்தியாவில் தங்க நகைக்கடன் சந்தையில் முதலிடத்தில் தமிழ்நாடு…

டெல்லி: 2026 மார்ச் நிலவரப்படி இந்திய தங்க நகை கடன் சந்தையில் மொத்த மதிப்பு 18லட்சத்து 60ஆயிரம் ரூபாய் கோடியாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களின் மதிப்பு மட்டும் 6லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதாவது இந்திய நகைக்கடன் சந்தையில் தமிழகம் மட்டும் 3ல் 1 பங்கை வைத்துள்ளது.

3 லட்சத்து 10ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திரா 2வது இடத்திலும், 1லட்சத்து 80ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் கர்நாடகா 3ஆம் இடத்தில் உள்ளன, தெலுங்கானாவில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன் மதிப்பு சுமார் 1லட்சத்து 60ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது, கேரளாவில் இது 1லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாயாகவும், மகாராஷ்டிராவில் 1லட்சத்து 10ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது. 60ஆயிரம் கோடி ரூபாய் நகைக்கடன் மதிப்புடன் குஜராத் 7வது இடத்தில் இருக்கிறது, உத்திரபிரதேசம் 40ஆயிரம் கோடி ரூபாய் நகைக்கடன் மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.

Spread the love