July 2, 2026

இந்தியா – இங்கிலாந்து இன்று டி20-ல் மோதல்

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய டி20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு டி 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5 டி 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்​ளது.

இந்​நிலை​யில் இருதரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்​டம் செஸ்​டர்​-லெ-ஸ்ட்​ரீட்​டில் உள்ள ரிவர்​சைடு மைதானத்​தில் இன்று இரவு 10 மணிக்கு நடை​பெறுகிறது. அயர்​லாந்து ஆடு​களத்​தில் இந்​திய அணி வீரர்​கள் பேட்​டிங் செய்ய சிரமப்​பட்​டனர். 15 வயதாகும் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்​ஷிக்கு அயர்​லாந்து தொடரில் வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இது விவாதப் பொருளாக மாறி​யிருந்​தது. எனினும் இங்​கிலாந்து தொடரிலும் சூர்​ய​வன்​ஷிக்கு வாய்ப்பு வழங்​கப்​படுவது சந்தேகமே. ஒருவேளை அவர், களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்சன் அல்​லது இஷான் கிஷன் நீக்​கப்​படக்​கூடும். சஞ்சு சாம்சன் அயர்​லாந்​துக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் 5 ரன்​களும், 2 ஆட்​டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமலும் வெளி​யேறி இருந்​தார். இஷான் கிஷன் இரு ஆட்​டங்​களை​யும் சேர்த்து 13 ரன்​கள் எடுத்திருந்​தார்.

அயர்​லாந்து தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்​மா, அபிஷேக் சர்மா உள்​ளிட்ட முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரிடம் இருந்து பெரிய அளவி​லானமட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. கடைசி போட்​டி​யில் வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக திலக் வர்மா தடு​மாறி​னார். அவர், அரை சதம் அடித்த போதி​லும் 46 பந்​துகளை எதிர்​கொண்டு 55 ரன்​களே சேர்த்​தார். இதனால் இங்​கிலாந்​துக்கு எதி​ரான தொடரில் இவர்​கள் கவன​முடன் செயல்​படக்​கூடும்.

இங்​கிலாந்து அணி ஹாரி புரூக் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் கேப்​டன் ஹாரி புரூக்​குடன் ஜாஸ் பட்​லர், ஜோர்​டான் காக்​ஸ், ஜேக்​கப் பெத்​தேல், வில் ஜேக்​ஸ், பில் சால்ட், டாம் பேன்டன் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்டவர்​கள்.

இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு ஜோப்ரா ஆர்ச்​சர், ஜோஷ்டங், சாகிப் மஹ்மூத், சோனி பேக்​கர், ஆதில் ரஷித், ரேஹான் அகமது ஆகியோரை உள்​ளிட்ட இங்​கிலாந்து அணி​யின் பந்​து​வீச்சு குழு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். இன்​றைய போட்டி நடை​பெறும் ரிவர்​சைடு மைதானத்​தில் இதற்கு முன்​னர் சர்​வதேச அளவில் 8 டி 20 போட்​டிகள் நடை​பெற்​றுள்​ளன.

இந்த மைதானத்​தின் சராசரி ரன் குவிப்பு 138 ஆகும். அதி​கபட்ச ஸ்கோர் 194 ஆக உள்​ளது. ஒட்​டுமொத்​தத்​தில் ஆடு​களம் பந்துவீச்சாளர்​களுக்கு உதவும் வகை​யில் இருக்​கக்​கூடும். எனவே ஆடு​களத்​துக்​கும் எதிரணி​யின் பந்​து​வீச்சு உத்​தி​களுக்​கும் ஏற்பவும் இந்​திய அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் தங்​களை மாற்​றிக்​கொண்டு பேட் செய்​வது அவசி​யம். இந்த தொடரை சோனி ஸ்போர்ட்​ஸ்​ நெட்​வொர்க்​ நேரலை செய்​கிறது.

Spread the love