இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக்கோரி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் கடந்த 2023, ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரை விடுவிக்கக்கோரி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பிடிஐ ஆட்சியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநில முதல்வர் சுஹைல் அஃப்ரிதி கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கானை விடுவிக்க சட்ட ரீதியான மற்றும் நீதித்துறை வழிகளை முழுமையாகப் பயன்படுத்திவிட்டோம். நீதி கிடைக்காவிட்டால், அமைதியான போராட்டம் நடத்தும் அரசியலமைப்புச் சட்ட உரிமையை பயன்படுத்துவோம். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
அவர்களது வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இம்ரானைச் சந்திக்கும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். இம்ரான் கானை விடுவிக்காவிட்டால் செப்.27-ம் தேதி நாடு முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு – 7 பேர் உயிரிழப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
7 மணி நேரம் விண்வெளியில் நடந்த இந்திய வம்சாவளி வீரர்