September 1, 2026

ஈரோடு பெருந்துறை சாலை வாய்கால்மேட்டில் உள்ள நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் மற்றும் தமிழ்நாடு முன்னாள் காவல் துறை இயக்குனர் முனைவர் எம். ரவி ஐ பி எஸ்..,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.  

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையேற்று உரையாற்றுகையில், 18வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொழில் நுட்பகல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடமிருந்தும், தேசிய அங்கீகார வாரியத்திடமிருந்தும் உயரிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மேலும் எங்களின் முக்கிய குறிக்கோளாக விளங்கும் “அனைவருக்கும் வேலைவாய்ப்பு” என்கிற அடிப்படையில் மாணவர்களை தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தயார் செய்யும் பொருட்டு பல்வேறு வகையான தொழில்முறை பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மாணவர்கள் படிப்பு மற்றும் ஆளுமை மேம்பாட்டில் தங்களது கவனத்தினை முழுமையாக செலுத்தி நல்ல பழக்க வழக்கங்களுடன் ஒழுக்கத்தினை கடைபிடித்து, பெற்றொர்களின் கனவுகளை நினைவாக்க எனது வாழ்த்துக்கள் என்று மாணவ மாணவிகளை வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். நந்தகோபால் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜீ. மோகன்குமார் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினார்கள்.இதனை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் எம். ரவி சிறப்புரையாற்றினார்.விழா முடிவில் மனிதநேய துறைத் தலைவர் முனைவர் என். விஜயகுமார் நன்றி கூறினார்.

Spread the love