ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சென்னிமலை சரகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சரக உதவி இயக்குனர் ஆர்.சித்ரா (செயலாட்சியர்) ஏற்பாட்டின் பேரில் நெசவாளர்களின் துயரை போக்குகின்ற வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமை ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் வெங்கடேசலூ துவக்கி வைத்து பார்வையிட்டார். மருத்துவ முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, மகளிர் மருத்துவம், காசநோய் பரிசோதனை சித்த மருத்துவம், இ.சி.ஜி, ஸ்கேன், இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டி சி ஓ உள்ளிட்ட சென்னிமலை அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேனேஜர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம்

More Stories
ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பூரில் வீ த லீடர்ஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு