ஒட்டன்சத்திரம் ஜூலை-5
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பூமிதானம், பஞ்சமி நிலங்களை மீட்க, புதிய நிலம் மீட்பு கூட்டு இயக்கம் தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்து, தனது உரையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 12842 பூமிதானம், பஞ்சமி நிலங்கள் உள்ளன. குறிப்பாக பூமிதான நிலங்கள் தேவத்தூர், மண்டவாடி, ஜவ்வாதுபட்டி, கரட்டுப்பட்டி, அம்மாபட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன.
நிலம் இல்லாத ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குதல் போன்றவை கடந்த மாநில அரசின் தவறான அணுகுமுறையால், உரிய பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. பூமிதானம், பஞ்சமி மற்றும் நிலம் ஆக்கிரமிப்பு போன்ற நிலங்களை மீட்டெடுத்து உரிய மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த புதிய கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு இதன் மூலம் இப்பகுதிவாழ் மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து தரப்பு ஒருமித்த கருத்துடைய கட்சிகள், அமைப்புகளோடு சேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவதாகும் என்றார்.
இந்த கூட்டத்தில் தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் தேவத்தூர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யு.சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஒடவை ஆர்.பிச்சைமுத்து, சமூக ஆர்வலர்கள் சு.ம.அசுரன் என்ற மகுடீஸ்வரன், லெக்கையன்கோட்டை வி.காளிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
இராமநாதபுரம் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில்மேற்கூரை சூரிய மின் சக்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி
திருப்பூர்