ஒட்டன்சத்திரம் ஜூலை.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற கூட்ட அரங்கில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் – புதிய மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திண்டுக்கல் மின் பகிர்மான கழகம் ஒட்டன்சத்திரம் சார்பில் வீட்டு மின் இணைப்புகளுக்கான சோலார் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராணி தலைமை வகித்தார். இதில் ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் க.திருமலைசாமி, நகராட்சி ஆணையாளர் மு.ஸ்வேதா, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒட்டன்சத்திரம் நகர தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், செந்தில் குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கார்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி பொறியாளர்கள், லைன்மேன்கள், மின் பணியாளர்கள், சோலர் வெண்டர்கள் அஸ்வின் சோலார் சன்ரைடர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

More Stories
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை
பழனியில் நில மோசடி வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த நிர்வாகிகள்