ஒட்டன்சத்திம் ஜூலை-2
ஒட்டன்சத்திரம் வட்டம், பெரியகோட்டை கிராமம், காசியகவுண்டன்புதூரில் விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்கும் பணிகளால் விவசாயிகள் பாதிப்பு. முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுத்து தார்சாலை பணியினை நிரந்தரமாக நிறுத்த விவசாயி கே.பி.கருப்புச்சாமி தலைமையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பெரியகோட்டை கிராமம், காசியகவுண்டன்புதூரில் விவசாயி கே.பி.கருப்புச்சாமி மற்றும் அவரது வகையறாக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களின் வழியாக சிலர் அனுமதி இல்லாமல், விவசாயிகளின் ஆட்சேபனை இருந்தும் தார்சாலை அமைக்க முற்பட்டு வருகின்றனர். சொந்த பட்டா நிலங்களில் தார்சாலை அமைப்பதால் விவசாயி நிலம் பாதிப்படைவதோடு அரசின் நிதி இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. தார்சாலை அமைக்கும் பணிக்கு சம்மந்தப்பட்ட விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை உள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்கும் பணியினை நிறுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) ஆகியோருக்கு தார்சாலை அமைக்கும் பணிக்கு ஆட்சேபனை தெரிவித்து நேரிலும், இந்திய அஞ்சலக விரைவு பதிவு அஞ்சலிலும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா
பழனி பெரியாவுடையார் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் ஸ்ரீ கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு