உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன கொசு வலைகளை ஆய்வு செய்யவேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது
கரூர் மாவட்டத்தில்உள்ள வீரராக்கியத்தில் ஷோபிகா மற்றும் விகேஏ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் ரசாயன கலந்த கொசு வலைகளை தயாரித்து ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
அந்த நாடுகளில் உள்ள கொசுக்கள் அழிக்கும் பொருட்டு நச்சு கலந்து கொசு வலைகளை உற்பத்தி செய்கின்றனர்.இதனால் வேலைக்கும் செல்லும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த இரண்டு நிறுவனங்களையும் ஆய்வு செய்து பணியாளர்கள் உடல்ரீதியாக பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு