October 13, 2026

காஞ்சிரங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிப் பகுதிகளில் வழித்தடம் எண் 17 அரசுப் பேருந்துகள் உரிய நேரங்களில் இயக்கப்படாததால், 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து வசதியின்றித் தவித்து வருகின்றனர்.

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பேருந்து சேவையைச் சீரமைப்பதுடன், குடிநீர் மற்றும் சாலை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியிலும் மனு வழங்கினர் 

Spread the love