புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் நகரங்களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக திட்டமிட்டு கலவரங்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்துவதாக முதல்வர் பகவந்த் மான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சக், முதல்வர் பகவந்த் மானுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என கூறிய கருத்துகளுக்கு முதல்வர் பகவந்த் மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்துடன் இந்தக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அடுத்த 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தொடரப்படும்” என கூறப்பட்டுள்ளது.
காவல் துறை மற்றும் தடயவியல் துறையினர் குண்டுவெடிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

More Stories
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது – பின்புலம் என்ன?