சிடிஆர். நிர்மல்குமார்
சென்னை: குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை என்று அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் விஜய் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து 144 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
எந்த நோக்கத்துக்காக மக்கள் விஜய்யை முதல்வர் ஆக்கினார்களோ, அந்த எண்ணம் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். சட்டப்பேரவை தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த ஆட்சியில், அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தொய்வின்றித் தொடரும்.
மற்ற கட்சித் தலைவர்களை சந்தித்தது போலத்தான் அதிமுக நிர்வாகிகளையும் விஜய் சந்தித்தார். இதில் குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
நீட் தேர்வில் கடந்த 5, 6 ஆண்டுகளாகவே தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டாலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. ஒரு சாதாரண தேர்வைக் கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை.
தேர்வர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் மத்திய அரசு, வினாத்தாள் கசிவை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்