கொடைக்கானல்: மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீளமான வாகனங்களுக்கான தடை முறையாகப் பின்பற்றப்படாததால், மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் 12 மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More Stories
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி புதுவை அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் – விற்பனையை தொடங்கிவைத்தார் அமைச்சர் காந்திராஜ்
டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு