November 5, 2026

கொடைக்கானல் மலைச்சாலையில் நீளமான வாகனங்களுக்குத் தடை!

கொடைக்கானல்: மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீளமான வாகனங்களுக்கான தடை முறையாகப் பின்பற்றப்படாததால், மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் 12 மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love