சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் பற்றி…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருந்துவந்த தடையை கடந்த 2018-இல் நீக்கிய உச்சநீதிமன்றம், இந்தப் பாலினப் பாகுபாடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று இத்தீா்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
கேரளம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்ட இத்தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிமுதல் விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், தலைமை நீதிபதியின் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, “தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருபவர்களின் மனுக்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரையிலும், எதிர்ப்பவர்களின் மனுக்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரையிலும் நடைபெறும்.
இறுதி வாதங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிய நேர அட்டவணையை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

More Stories
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: அனைத்து எம்.பி.க்களிடமும் கடைசி நேர ஆதரவு கோரிய பிரதமர்
“தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைத்துவிடும்” – சசி தரூர்
“மகளிர் இடஒதுக்கீடு… அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு