சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (நவ.2) பவுனுக்கு ரூ.360 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்தச் சூழலில் கடந்த 31-ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,480 என அதிரடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை விவரம்:
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,775-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,200-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.392 உயர்ந்து, ஒரு பவுன் 1,11,496-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.83,624-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை ஆகிறது.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840க்கு விற்பனை!
இந்தியாவில் 12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: உலக வங்கி பாராட்டு