இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளில் முறைகேடுகள் மற்றும் ஒப்பந்த மீறல்கள் நடந்துள்ளதாக தமிழக வெற்றி கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
₹40.08 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் குறைந்த ஆழத்தில் தரமற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குடிநீர் குழாய்களின் தரம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு செய்து ஒப்பந்த ஆவணங்கள், நிதி விவரங்கள் மற்றும் பணித் தர அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், விதிமீறல்கள் உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு