October 5, 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,400க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,675க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,09,400க்கும் விற்றது. வெள்ளி விலையில் நேற்று முன்தினம் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது.

அதுவும் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.13,675க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love