சோழவந்தான் மே_16
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு சுமார் 2678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா எம்எல்ஏ வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முன்னதாக வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையிலிருந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார் அவருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் தொடர்ந்து சமயநல்லூரில் உள்ள வீரபத்திரன் கோவிலில் சாமி தரிசனம் செய்து சமயநல்லூரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார் இதில தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி