July 22, 2026

ஜூலை 18-ம் தேதி, 46 ஆண்டுகள் இடைவெளி: விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததில் அப்துல் கலாமின் தொடர்பு

புதுடெல்லி: கடந்த 1980-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இந்தியாவின் முதல் உள்​நாட்டு செயற்​கைக்​கோள் ஏவுவாகனமான எஸ்​எல்​வி-3, ரோகினி (RS-1) செயற்​கைக்​கோளை புவி​யின் கீழ்​வட்​டப் பாதை​யில் நிலைநிறுத்​தி​யது. இதன் மூலம் இந்தியா விண்வெளித் துறை​யில் முக்​கிய உலக நாடு​களின் பட்டியலில் இணைந்​தது.

இந்​நிலை​யில் சரி​யாக 46 ஆண்​டு​கள் கழித்து அதே ஜூலை 18-ம் தேதி இந்​தி​யா​வில் தனி​யார் நிறு​வனத்​தால் (ஸ்​கைரூட்) முதன்​முதலில் உரு​வாக்​கப்​பட்ட விக்ரம்-1 ராக்கெட் வெற்​றிகர​மாக விண்​ணில் ஏவப்​பட்​டது. இந்த நாளும் எப்​போதும் நினைவுகூரப்படும்.

எஸ்​எல்​வி-3 திட்​டத்​தின் இயக்​குந​ராக இருந்​தவர் விஞ்​ஞானி​யும் முன்​னாள் குடியரசுத் தலை​வரு​மான அப்​துல் கலாம் ஆவார். எனவே, ஸ்கைரூட் நிறு​வனம் கலா​முக்கு விக்​ரம்-1 மூலம் பல வழிகளில் அஞ்​சலி செலுத்​தி​யுள்​ளது. இந்த ராக்​கெட்​டின் மூன்று திடநிலை அடுக்​கு​களுக்கு கலாம்​-1200, கலாம்​-250 மற்​றும் கலாம்​-100 என பெயர் சூட்டியுள்​ளது. அது மட்​டுமின்​றி, கலாமின் நுண்​-சிற்​பம் ஒன்​றை​ விக்​ரம்-1 விண்​வெளிக்கு சுமந்து சென்​றுள்​ளது.

இதுகுறித்து ஸ்கைரூட் நிறு​வனத்​ தலைமை நிர்​வாக அதி​காரி பவன் குமார் சந்​தனா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: டாக்​டர் அப்​துல் கலாம் நம் அனை​வருக்​கும் ஒரு பெரிய உத்​வேகம். விக்ரம்-1 ராக்​கெட்​டின் முதல் 3 அடுக்​கு​களுக்கு அவருடைய பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், பல மாதங்​களாக ஒரு ஊசி​யின் காதில் செதுக்​கப்​பட்ட டாக்​டர் கலாமின் நுண்​-சிற்​பம் ஒன்​றை​யும் நாங்​கள் விண்​வெளிக்கு அனுப்​பி​யுள்​ளோம்.

எஸ்​எல்​வி-3-ன் முதல் வெற்​றிகர​மான பயணம் நிகழ்ந்த அதே ஜூலை 18-ம் தேதி​யில்​தான் இந்த விக்​ரம்-1 ஏவுதலும் நிகழ்ந்​துள்​ளது என்​பது அற்​புத​மானது. பெரிய ராக்​கெட்​களை உரு​வாக்​கு​வது​தான் எங்​கள் நீண்​ட​கால கனவு. இது இந்​தி​யாவை ஒரு பெரிய விண்​வெளி மைய​மாக மாற்​றும். தற்​போதைய வெற்றி எங்​கள் எதிர்​காலத் திட்​டங்​களுக்கு உந்​துதலைத் தந்​துள்​ளது. நாங்​கள் தொடர்ந்து வானத்தை இலக்​காக கொண்​டு, அதிவேக தொடர் ஏவுதல்களைச் சாத்​தி​ய​மாக்​கு​வோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love