ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் மூட்டைகளாக குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, தொன்போஸ்கோ நகர் பகுதியில் உள்ள ரயில்வே துணை மின்நிலையம் அருகே திருப்பத்தூர் – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் குப்பை கழிவுகளையும் இறைச்சி கழிவுகளையும் மூட்டைகளாக கட்டி வீசி செல்கின்றனர். இதனால் குப்பை கழிவுகளும் இறைச்சி கழிவுகளும் மூட்டைகளாக குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு சாலையை கடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முகம் சுளித்து செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகமும் துறை அதிகாரிகளும் சாலையோரத்தில் குப்பை கழிவுகளையும் இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு