தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயம்புத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களர்களை வரவேற்க ரோபோ TINA அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று ஏப்ரல் 23 காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுக்காப்புடன் அமைதியாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
பல இடங்களில் காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வாக்களிக்க காத்திருக்கின்றனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவை சுமுகமாக நடத்த தேர்தல் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் வசதியாக வாக்களிக்க தனி இலவச பேருந்து சேவை, பிக் அப் செயலி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் வாக்களிக்க இலவச பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
அமைதியான முறையில் நடக்கும் தேர்தல்
இதனால் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு வாக்களிக்க வரும் மக்களை வரவேற்கும் வகையில் “TINA” என்ற பெயருடைய ரோபோ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாக்காளர்களுக்கு சாக்லேட் வழங்கி வரவேற்கிறது. இதைக் கண்டு வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுகின்றனர்.
வாக்களர்களை வரவேற்கும் ரோபோ
இந்த புதிய முயற்சி தேர்தல் நாளை ஒரு விழாக்கால மனநிலையுடன் மாற்றியுள்ளது என்று கூறலாம். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ரோபோவை பார்த்து ஆர்வமாக செல்கின்றனர். வாக்களிக்க வரும் மக்களுக்கு சிறிய பரிசாக சாக்லேட் வழங்கப்படுவதால் வாக்குப்பதிவு அனுபவம் மேலும் இனிமையாக மாறியுள்ளது.
வாக்களிப்பு என்பது கடமை மட்டுமல்ல
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:வாக்காளர்களை ஊக்குவிக்கவும் வாக்களிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும் இதுபோன்ற புதுமையான முயற்சிகள் உதவுகின்றன. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்றும் தெரிவித்தனர்.மொத்தத்தில் கோயம்புத்தூரில் நடந்த இந்த சிறிய ஆனால் தனித்துவமான முயற்சி தேர்தல் நாளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை சேர்த்துள்ளது. வாக்களிப்பு என்பது கடமை மட்டுமல்ல, மகிழ்ச்சியான அனுபவமாகவும் மாற முடியும் என்பதை இது காட்டுகிறது.
தொடர்ந்து கடந்த முறை இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் தேர்தலில் சுமார் 14.59 லட்சம் புதிய வாக்காளர்கள் 18-19 வயதுடையவர்கள் இணைந்துள்ளனர்.
வாக்காளர் புள்ளிவிவரங்கள்
மொத்த வாக்காளர்கள் -5,73,43,291
பெண் வாக்காளர்கள்-2,93,04,905
ஆண் வாக்காளர்கள்-2,80,30,658
மூன்றாம் பாலினத்தவர் -7,728 ஆகும்.
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது. இன்று ஏப்ரல் 23, 2026 தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
தேர்தல் ஆணைய நெறிமுறை அறிந்து விஜய் கோரிக்கை வைத்திருக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்
வாக்களிக்க வந்தபோது ரசிகர்களை வீடியோ எடுத்த அஜித்: என்னவா இருக்கும்?
பிற்பகல் 1 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 56.81% வாக்குப் பதிவு