May 29, 2026

திமுகவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைவர் வைகோ

தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றது. திமுக தோல்வியடைந்து ஆட்சியை தவறவிட்டது. இதைத்தொடர்ந்து திமுகவின் எதிர்காலம் குறித்து மதிமுக தலைவர் வைகோ தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கின்றார்

தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. இந்த முடிவுகளை தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகின்றது. கடந்த பல வருடங்களாக தமிழ்நாட்டை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தேர்தலில் புதிதாக துவங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இரு பெரும் கட்சியையும் பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்று சாதித்துள்ளது.

  

தேர்தல் முடிவிற்கு முன்பு வரை பெரும்பாலானோர் திமுக தான் வெற்றிபெறும் என கருதினார்கள். கருத்து கணிப்புகள் கூட பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாக தான் அமைந்தது. தவெக வேண்டுமானால் ஓரிரு இடங்களில் வெற்றிபெறலாம். திமுக மற்றும் அதிமுகவின் வாக்குகளை சிதற அடிக்கலாம். மற்றபடி அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பது தான் கருத்தாக இருந்தது.

தவெகவை திமுக குறைத்து மதிப்பிட்டுவிட்டது :மமக தலைவர் ஜவாஹிருல்லா
அந்த கருத்தை எல்லாம் உடைத்தெறிந்து தவெக 108 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றது. மறுபக்கம் திமுகசுமார் 70 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. எதிர்க்கட்சியாக கடந்த முறை இருந்த அதிமுக தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. குறிப்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் திமுக இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில் அக்கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் பேசியது என்னவென்றால், தவெகஇந்த தேர்தலில் வெற்றிபெற்றது. முதலமைச்சர் விஜய் சில இடங்களில் தான் பரப்புரை செய்தார்.

ஆனால் டிவியில் மற்றும் சோஷியல் மீடியாவில் அவரது பரப்புரையை மாறி மாறி போட்டுக்காட்டினார்கள். அது பெருவாரியான மக்களுக்கு சென்றடைந்தது. இதையெல்லாம் வைத்து தான் தேர்தல் முடிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் இந்த தேர்தலில் ஆச்சர்யங்களை ஏற்படுத்துவார் என கூறியிருந்தேன். அதன்படியே நடந்துவிட்டது.

மறுபக்கம் திமுக இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அவர்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாது. தவெக வெற்றிபெற்றதால் திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்தியாவிலேயே திமுக போன்ற ஒரு கட்டமைப்பு கொண்ட கட்சியை பார்க்க முடியாது. இதற்கு முன்பு பல தோல்விகளையும் வெற்றிகளையும் திமுக சந்தித்துள்ளனர்.

கண்டிப்பாக இந்த தோல்வியில் இருந்து அவர்கள் மீண்டு எழுவார்கள் என வைகோ திமுகவின் எதிர்காலம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கின்றார். இந்நிலையில் தவெக இந்த தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சிலர் திமுகவின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களே கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய அளவில் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தான் இதுபோன்ற கேள்விகள் எழுந்து வருகின்றது. ஆனால் திமுக இதுபோல தோல்விகளை கண்டு மீண்டு எழுத கட்சி, சிறப்பான கட்டமைப்பை கொண்ட கட்சி, எனவே திமுக மீண்டு வரும் என வைகோ நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love