சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன்– கோப்புப்படம்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் ரவிக்கோர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்தமுறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இம்முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தையின்போது கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 4 தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளின் பட்டியலை விசிக வழங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட திமுக, கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
அவசர ஆலோசனை கூட்டம் நடத்தும் விஜய்! தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பிறகு பனையூரில் குவியும் வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர்களுடன் சந்திப்பு.. விஜய்யின் அடுத்த திட்டம்
“வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக, கூட்டணிக் கட்சி முகவர்கள் கவனம்” – இபிஎஸ் அறிவுரை