இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள குலாம் காதர் கார்டன் மீலாது கமிட்டி சார்பில் சமூக நல்லிணக்க அசைவ விருந்து வழங்கும் நிகழ்ச்சி குலாம் காதர் கார்டன் மிலாது கமிட்டி தலைவர். குலாம் காதர் யாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் சாதி மத பேதமின்றி சமத்துவமாக வாழவேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து சமத்துவத்தை பேணும் வகையில் ஊர் பொதுமக்களை ஒன்று திரட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குலாம் காதர் கார்டன் மிலாது கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் மிலாடி நபி எனும் நபியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சாதிமத பேதமின்றி ஊர் பொது மக்களை ஒன்று திரட்டி அசைவ விருந்து வழங்கிய இஸ்லாமியர்கள்!

More Stories
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம்
02-09-2026