October 29, 2026

திருப்பூர் குன்னத்தூரில் கவன ஈர்ப்பு பேரணி 

அக்டோபர் 29 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பின் சார்பில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க கோரி குன்னத்தூரில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பெருந்துறை முதல் ஆறாவது நீரூற்று நிலையம் வழியாக காரமடை வரை விடுபட்டுள்ள அனைத்து குளம் குட்டைகளை குறிப்பாக பெருந்துறை அவிநாசி பெருமாநல்லூர் குன்னத்தூர் சேவூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்ட பணிகளை விரைந்து தொடங்கிட கோரியும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டத்தில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்திடவும் மற்றும் பாண்டி ஆறு பவானி ஆறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்திடவும் பசுமை நீர் வலை பின்னல் திட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் விவசாயிகள் பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய சங்கங்கள் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர் மேலும் விரைவில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் விடுபட்டுள்ள 1400 குலம் குட்டைகளை தடையின்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர் பேரணி ஏற்பாடு குன்னத்தூர் பகுதி அத்திக்கடவு அவினாசி திட்ட குழுவினர்…

Spread the love