ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 2023–24ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிடப் பணிகள் முழுமையடையாத நிலையில் திறந்து வைக்கப்பட்டு மறுநாளே மூடப்பட்டதாக கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மருத்துவத் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம் இன்று வரை செயல்படாததால், அவசர சிகிச்சைக்காக தொலைதூர மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுடைய 125 வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..