November 26, 2026

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா – வங்கதேச அணிகள் இடையிலான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் போட்டி செஞ்​சூரியன் நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இனனிங்​ஸில் வங்​கதேச அணி 91 ரன்​களுக்கு சுருண்​டது. அதே வேளை​யில் தென் ஆப்பிரிக்க அணி 494 ரன்​கள் குவித்​தது. மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் 150, வியான் முல்​டர் 100 ரன்​கள் விளாசினர்.

403 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய வங்​கதேசம் அணி நேற்​றைய 3-வது நாள் ஆட்டத்தில் 49.4 ஓவர்​களில் 184 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதிகபட்​ச​மாக தவூஹித் ஹிர்​தோய் 41, மஹ்ஃபிசுல் இஸ்​லாம் 38, கேப்​டன் நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 34, தன்​ஸித் ஹசன் 29 ரன்​கள் சேர்த்​தனர்.

தென் ஆப்​பி​ரிக்க அணி தரப்​பில் வியான் முல்​டர் 11 ஓவர்​களை வீசி 3 மெய்​டன்​களு​டன் 31 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்​தினார். இன்​னிங்ஸ் மற்​றும் 219 ரன்​கள் வித்தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பி​ரிக்க அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்​பற்றியது. ஜோகன்னஸ்​பர்க்​கில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்டிருந்​தது.

Spread the love