நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் சேலம் மெயின் ரோட்டில், முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயிலில், மாநகராட்சி சாõர்பில் ரூ. 44.20 லட்சம் மதிப்பில் அண்ணா நினைவு வளைவு என்ற பெயரில் ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நாமக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அலங்கார வளைவை திறந்து வைத்தார். மாநகராட்சி நியமன கவுன்சிலர் மணிமாறன் கல் வெட்டை திறந்து வைத்தார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்