June 27, 2026

பழனியில் சாக்கடையில் ஓட்டல் கழிவுகளை கொட்டியவருக்கு  ரூ 5000 அபராதம்

 பழனி ஜூன் 27

 பழனி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவுறுத்தி இருந்தார். இதையொட்டி பழனி நகராட்சி நிர்வாகம் தீவிர சோதனை செய்து வந்தது. இந்நிலையில் நேற்று சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் தலைமையில் சுகாதார பணியாளர்கள் பஸ் நிலையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஆட்டோ நிலையம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியில் உள்ள ஓட்டல் நிர்வாகத்தினர் கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. ஹோட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன் என்பவருக்கு ரூபாய் 5000  அபராதம் விதிக்கப்பட்டது

Spread the love