பழனி ஜூன் 27
பழனி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவுறுத்தி இருந்தார். இதையொட்டி பழனி நகராட்சி நிர்வாகம் தீவிர சோதனை செய்து வந்தது. இந்நிலையில் நேற்று சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் தலைமையில் சுகாதார பணியாளர்கள் பஸ் நிலையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஆட்டோ நிலையம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியில் உள்ள ஓட்டல் நிர்வாகத்தினர் கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. ஹோட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன் என்பவருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது

More Stories
12-08-2026
12-08-2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!