பழனி அக்டோ 31
பழனி அடிவாரத்தில் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதிமுக சார்பில் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதை முன்னிட்டு பழனி அடிவாரம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு ரவி மனோகரன் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகரச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் டி முத்துசாமி, ஆர் எம் டி சி மாரியப்பன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எஸ் பி அன்வர்தீன், பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் சக்திவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் குகன், மணிகண்டன், எஸ் கே பாபு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்

More Stories
31-10-2026
31-10-2026
31-10-2026