June 20, 2026

பழனியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த தின விழா 

 பழனி ஜூன் 20 

 பழனியில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பழனியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப்பெட்டகம், பழங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பழனி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சி இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் பாலகுமார் தலைமையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் முன்னிலையில், பழனி சட்டமன்ற பொறுப்பாளர் முத்துச்சாமி, மாவட்ட துணை தலைவர் முருகானந்தம், நகரத் தலைவர் முத்து விஜயன், முன்னாள் கவுன்சிலர் சுந்தர், மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன், ஆயக்குடி காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கவிமணி, வட்டார தலைவர் ராமராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பர்வேஸ் அஹமது , ஒபிசி அணி மாநில செயலாளர் சாயிரா பானு , முகமத் அலி, அப்பாவு, பழனி பாப்புசாமி  மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love