பழனி ஜூலை 01
பழனி திருஆவிணன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார். பழனியில் மூன்றாம் படை வீடான திருஆவிணன்குடி முருகன் கோவிலில், உபயதாரர் கண்பத் கிரேண்ட் அதிபர் என்.ஹரிஹரமுத்து சார்பில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு, 16 வகையான அபிஷேகமும் பின்பு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. அதேபோல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் உபயதாரர் என்.ஹரிஹரமுத்து சார்பில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள கைலாசநாதர் நடராசர், பெரியநாயகி அம்மன், சோமாஸ் ஸ்கந்தர், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகமும் பின்பு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதில் கண்பத் கிராண்ட் அதிபர்கள் என்.ஹரிஹரமுத்து, உஷா ஹரிஹரமுத்து, செந்தில்குமார், சரவண பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கரன், பேச்சியம்மாள் அரிசி ஆலை உரிமையாளர் சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிசத் செந்தில்ஜி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான மணிக்கண்ணன், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி ஜெகதீஷ், கார்த்தி மற்றும் பச்சமுத்து, கோயில் சூப்பிரண்டு அழகர்சாமி, மணியம் சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
64 நாட்களுக்கு பிறகு பழநியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்
ஏழுமலையானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்