
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்.
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கின. இதுகுறித்து, ஆர்பிஎஃப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து, ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சி.கோபாலகிருஷ்ணன் மற்றும் எம்.ராஜேஷ் ஆகியோர் கொண்ட ஆர்பிஎஃப் போலீஸார் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அசாம் மாநிலம் நியூ தின்சுகியாவில் இருந்து பெரம்பூர் வழியாக பெங்களூரு நோக்கிச் செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் ஆர்பி எஃப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரயில் பெட்டியில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் நெடு நேரமாக இருந்தது. அதை உரிமை கோரிப் பெற யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் 4 பாக்கெட்களில் பவுடர்கள் இருந்தன.
அதை சோதித்தபோது, ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. 5 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
இதையடுத்து இந்த போதைப் பொருட்கள் மேல் அதிகாரிகளின் விசாரணைக்காக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
போதைப் பொருட்களை ரயிலில் கடத்திய நபர் யார், போலீஸரை கண்டதும் போதைப்பொருளை வைத்துவிட்டு தப்பி விட்டாரா என்ற கோணத்தில் ஆர்பிஎஃப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.