ஹைதராபாத்: பிரதமர் மோடி அடுத்த மாதம் 9ம் தேதி ஹைதராபாத் வர உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்று காலை ஹைதராபாத் வரும் பிரதமர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஹைதராபாத் பயிற்சி மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்க உள்ளார். 3-ம் முறை பிரதமர் ஆன பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் பலத்த வரவேற்பு ஏற்பாடுகளும், பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் இன்று முதல் நடைபெறும் என தெரிகிறது.

More Stories
“மே 4-க்கு பிறகு பாஜக அரசின் பதவியேற்பு விழாவுக்காக மேற்கு வங்கம் வருவேன்” – பிரதமர் மோடி நம்பிக்கை
கோடை விடுமுறை: கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு