August 7, 2026

லிட்டில் பிளவர் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஆண்டிப்பட்டி, ஜூன் 12, ஆண்டிப்பட்டியில் உள்ள தி லிட்டில் பி ளவர் பள்ளியில் எல்.கே.ஜி.யு.கே.ஜி மாணவர்களின் முதல் நாள் வகுப்பு இன்று உற்சாக வரவேற்புடன் தொடங்கியது.

பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், முதல்வர் உமாமகேஸ்வரி, தாளாளர் மனைவி தமயந்தி, செயலாளர் மாத்யூஜோயல் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டனர். புதிதாக பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து மற்றும் கேக் வழங்கி அசத்தினர்.

உடன் வந்த பெற்றோர்களுக்கு இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. ஹலோகிட்டி’ கார்டூன் உடையணிந்த கதாபாத்திரம் குழந்தைகளை மகிழ்வித்தது. மாணவர்களும் பெற்றோர்களும் ஹலோ கிட்டியுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வநிரஞ்சனா, நாகலட்சுமி, பூமா, கவிதா, ராகினி, தமிழ்செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முதல் நாளிலேயே பள்ளி மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்ததாக பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Spread the love