September 21, 2026

பழனி முருகன் மலைக்கோயில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது

 பழனி ஜூன் 13  

பழனி முருகன் மலைக் கோயிலில் போகர் சன்னதி உள்ளது. பழனி முருகப்பெருமானின் மூலவர் சிலையை  நவபாஷாணங்களால்  வடிவமைத்தவர் போகர் எனும் சித்தர் ஆவார். இவரது ஜீவசமாதி பழனி மலை கோயிலில் உள்ளது. நேற்று போகரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, போகர் சன்னதியில் உள்ள மரகதலிங்கம் புவனேஸ்வரி அம்மன் சிலைகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் பழனி புலிப்பாணி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள், ஜம்பு சாமிகள் மற்றும் பழனி தொகுதி ரவி மனோகரன் எம் எல் ஏ இளைய பட்டம் செல்வநாதன், கௌதம் கார்த்திக், டாக்டர் பன்னீர்செல்வம், டாக்டர் கல்பனா உள்பட ஏராளமான உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வெளி மாநில பக்தர்கள் பங்கேற்றனர்

Spread the love