கருப்பு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விஜய்யை பற்றி போட்ட ட்வீட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவது போன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் நடிப்பின் நாயகன் சூர்யா.
முக்கிய அம்சங்கள்:
- விளாசப்பட்ட ஆர்.ஜே. பாலாஜி
- சூர்யா கோரிக்கை
- தமிழகத்தில் கருப்பு சாதனை

கருப்பு வசூல்: சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்த கருப்பு படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தான் இயக்கிய படம் நடத்தி வரும் வசூல் வேட்டை குறித்த ட்வீட்டுகளை எல்லாம் ரீட்வீட் செய்து வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. மேலும் கருப்பு படத்தில் வந்த காட் மோடி பாடல் வீடியோ வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் சூர்யாவின் இன்ஸ்டா ஸ்டோரி குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்பாக இருக்குமாறு சூர்யா தெரிவித்திருப்பது சும்மா இல்லை ஆர்.ஜே. பாலாஜியை யாரும் இனியும் விளாச வேண்டாம் என்று அண்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார் என பேசப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்: கருப்பு எனும் பிளாக்பஸ்டர் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜியை சூர்யா ரசிகர்கள் திட்டுவதற்கு காரணம் அவர் போட்ட ஒரு ட்வீட். முதல்வர் விஜய்யை சந்தித்தது குறித்த ட்வீட்டில் அவரை புகழ்ந்து பேசியிருந்தார். அதை பார்த்து சூர்யா ரசிகர்கள் கடுப்பாகவில்லை. With the man who started it all for #Karuppu என தெரிவித்தது தான் பிடிக்கவில்லை.
கருப்பு படம் வெற்றி பெற காரணமே சூர்யா. அப்படி இருக்கும்போது நீங்கள் சொன்ன கதையை கேட்டுவிட்டு நடிக்க மறுத்தவரை போய் படத்தின் வெற்றியுடன் தொடர்புபடுத்தி தலையில் வைத்து கொண்டாடுவது நியாயம் இல்லை. கொஞ்சமாவது நன்றி உணர்ச்சியுடன் இருக்கவும் பாலாஜி என்றார்கள் சூர்யா ரசிகர்கள். இயக்குநர்கள் ஒரு நடிகரை பார்த்து கதை சொல்லி அதை அவரை நிராகரித்து வேறு நடிகர் நடிப்பது சினிமாவில் சாதாரண விஷயம் ஆகும். அப்படி இருக்கும்போது கருப்பு படத்தை விஜய் நிராகரித்ததை போய் பெரிதாக பேசுகிறீர்களே பாலாஜி. இல்லை விஜய் நிராகரித்ததால் தான் கருப்பு ஹிட்டானது என்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி கேட்டார்கள்.
என் படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் பிரச்சனை பண்றாங்களேனு நீங்கள் அழுதபோது விஜய்யா உங்களுக்கு உதவி செய்தார்?. சூர்யா அண்ணன் தானே பணம் கொடுத்தார். படம் பிளாக்பஸ்டரானதும் ஏதோ உங்களுக்காக வெற்றி பெற்றது மாதிரியும், விஜய் தான் காரணம் என்பது போன்றும் பேசாதீர்கள் என்றார்கள் ரசிகர்கள். அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சூர்யா ஸ்டோரி போட்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
அன்பு சூர்யா: நீங்கள் சூர்யாணாவை குறைத்து பேசியும் கூட அவர் இன்னும் உங்கள் மீது அன்பாக இருக்கிறார். அது தான் அவரின் குணம் என்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். 2026ம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை திரைக்கு வந்த தமிழ் படங்களில் ரூ. 300 கோடியை தாண்டிய முதல் தமிழ் படம் சூர்யாவின் கருப்பு.
அடடே ஜேசன் சஞ்சய் ரஜினி ரசிகனா!: சிக்மா ஸ்டைல் பாட்டில் அந்த வரியை கவனிச்சீங்களா?லக்கி சார்ம் த்ரிஷா: இந்நிலையில் கருப்பு பிளாக்பஸ்டரானதற்கு அதன் நாயகி த்ரிஷா கிருஷ்ணன் ராசி என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். அது மட்டும் அல்ல விஜய்க்கு அவரின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த லியோவின் ஹீரோயின் த்ரிஷா. அஜித் குமார் கெரியரின் மாபெரும் வெற்றிப்படம் குட் பேட் அக்லியிலும் த்ரிஷா தான் ஹீரோயின். இப்போ புரியுதா பிளாக்பஸ்டராகணும்னா அந்த படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இருக்கணும் என்கிறார்கள் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்இதற்கிடையே பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலுக்கு சென்று அருவாள் சாத்தி நன்றி கருப்பா என தெரிவித்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.

More Stories
ரவிதேஜாவின் `இருமுடி கட்டு’ க்ளிம்ப்ஸ் வெளியீடு! | Irumudi Kattu | Ravi Teja | Shiva Nirvana
எஸ் ஜே சூர்யா படப்பிடிப்பில் விபத்து… ஒருவர் பலி!| Killer | S J Suryah
சிவராஜ்குமார் உடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்!