
சென்னை: தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியில் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் என அனைத்தையும் அந்நிய நாடுகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் திட்டமிட்டுத் தாரைவார்க்கும் தேச விரோத செயலில் ஈடுபடுகிறது.
டெல்லியில் ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அமெரிக்க அதிபரின் வர்த்தக நலன்களுக்காக இந்திய உழவர்களை பலிகொடுக்கத் துணிந்திருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வரும் 12-ல் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
வள்ளியூா் ரயில் நிலையத்தில் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள் – தாகம் தீா்க்குமா ரயில்வே நிா்வாகம்?
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
நபார்டு வங்கிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு