September 23, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி திருவாடானை தொகுதிக்குட்பட்ட , 

 வ.உ.சி நகர், சிவஞானபுரம், மகாசக்தி நகர், சக்கரக்கோட்டை, சேதுநகர், பசும்பொன் நகர், கூரியூர், அச்சுந்தவையில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, ஜோதி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சைனா பாஸ்கர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி.ஆர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் 

வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து, தாரை தப்பட்டை முழக்கத்துடன் பூமாலை பொழிந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் தேர்தல் களத்தை உற்சாகமாக மாற்றியதுடன், அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Spread the love