July 28, 2026

“அரசியல் நிலைப்பாடுகள், கோட்பாடுகள் இன்று இருக்கும், நாளை மாறும்..” – சீமான் பேச்சு!

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சராகுவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளது” எனக் கூறினார். மேலும், “மாப்பிள்ளை சீமான்” எனக் குறிப்பிட்டு பேசினார்.

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா, திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் பிரம்மாண்டமாக அகில இந்திய ரசிகர் மன்றம் சார்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சரத்குமாருடன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கராத்தே தியாகராஜன் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெவ்வேறு கொள்கை உடைய இரு முக்கியத் தலைவர்கள் ஒரே மேடையில் உறவு பாராட்டி சுவாரசியமாகப் பேசியது தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

விழாவில் முதலில் பேசிய நயினார் நாகேந்திரன், “சரத்குமாருக்கு பாஜகவில் நிச்சயமாக தேசிய அளவிலான பதவிகள் தேடி வரும். லட்சக்கணக்கான மக்களைக் கொள்ளை கொண்டவர். ஒரு சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ரசிகர் என்று கூறினால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றார்.

Spread the love